இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை – ஸ்பெயின் பூரண ஆதரவு…

இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை பெற்று கொடுப்பது தொடர்பில் பூரண ஆதரவை வழங்கவுள்ளதாக ஸ்பெயின் வெளிவிவகார அமைச்சர் அல்போன்சோ தாஸ்டிஸ் குசேடோ தெரிவித்துள்ளார்.

ஜெனிவா மனித உரிமைகள் மாநாடு இடம்பெற்று வரும் நிலையில், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் நேற்று(01) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.