“இலங்கைக்கு நன்றி” 108 கோடி குடுவுடன் கைதான அமெரிக்க நபர்கள் இருவர் வலையில் – அமெரிக்காவினால் தேடப்படும் முக்கிய இரு புள்ளிகளாம்..

சுமார் 108 கோடி பெறுமதியான போதைப் பொருட்கள் 97Kg உடன் கடந்த ஜனவரி 22ம் திகதி கைதான அமெரிக்க நாட்டு நபர்கள் இருவரிடமும் விசாரணைகளை முன்னெடுக்க இலங்கை வந்திருந்த அமெரிக்க இரகசிய பொலிஸ் பிரிவின் விசாரணைகளில் குறித்த இரு நபர்களும் அந்நாட்டில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு வந்த நிலையில் தேடப்படும் குற்றவாளிகள் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இருவரில், ஒருவர் அந்நாட்டில் பிரதான போதைப்பொருள் வர்த்தகத்தில் இடம்பெறும் முக்கிய புள்ளி என்றும், குறித்த சந்தேக நபர்களை கைது செய்த பொலிஸ் அதிரடிப் படையினருக்கும் போதை மருந்து தடுப்பு பிரிவுக்கும் அமெரிக்க இரகசிய பொலிஸ் பிரிவு நன்றி தெரிவித்துள்ளது.