இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2.5% வீழ்ச்சி..

2016ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டின் மார்ச் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தகவல்கள் தெரிவித்துள்ளன.

2016ம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு லட்சத்து 92 ஆயிரத்து, 841 சுற்றுலா பயணிகள்இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில், இவ்வாண்டின் மார்ச் மாதத்தில் ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 76 சுற்றுலா பயணிகளே இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கையானது, 2016ம் ஆண்டைவிட 2.5 சதவீதத்தால் 2017ம் ஆண்டில் வீழ்ச்சியடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)