(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
இலங்கைக்கு கடன் வழங்குவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் இன்று (01) உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, சர்வதேச நாணய நிதியமும் இலங்கை அதிகாரிகளும் சுமார் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 48 மாத ஏற்பாட்டுடன் இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகளை ஆதரிக்கும் உடன்பாட்டை எட்டியுள்ளனர்.