இலங்கைக்கு GSP பிளஸ் வரிச்சலுகை வழங்க ஆதரவளிக்கிறது பிரான்ஸ்

இலங்கைக்கு ஜி.எஸ்.பீ பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதாக பிரான்ஸ் உறுதி அளித்துள்ளது.
அத்துடன் இலங்கை மீது விதிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய மீன்பிடித் தடையை நீக்குவதற்கு பிரான்ஸ் ஆதரவு வழங்கியதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிரான்ஸ்சிற்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவுசெய்து நாடு திரும்பியுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் ஊடாக பிரான்சுடனான இருதரப்பு கூட்டை மிகவும் உயர்ந்த மட்டத்திற்கு இட்டுச் செல்வதாக கூறியுள்ளார்.
பிரான்ஸ்சிற்கான விஜயத்தின் போது அந்த நாட்டின் வெளிவிவகார மற்றும் சர்வதேச அபிவிருத்திக்கான அமைச்சருடன் இருதரப்பு கலந்துரையாடல்களை மங்கள சமரவீர மேற்கொண்டுள்ளார்.