இலங்கைக்கு GSP பிளஸ் வரிச்சலுகையை வழங்க தகுதி ஆய்வை மேற்கொள்ள பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு..

இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கான தகுதி ஆய்வை மேற்கொள்ளும் வகையில் விஷேட பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

நாட்டில் நிலவும் அரசியல் நிலைத்தன்மை, மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் சட்டங்கள் உள்ளிட்ட ஏது நிலைகள் பலவற்றை அவர்கள் அவதானிக்கவுள்ளனர்.

இவர்களின் பரிந்துரைகளுக்கு அமையவே இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைககள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை குறித்த வரிச்சலுகை தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 19 ஆம் திகதி பெல்ஜியத்தின் பிரசல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது.

 

(rizmira)