துபாய் நாட்டுக்கு சொந்தமான Aris 13 இலங்கைக் கொடியுடன் பயணித்த எரிபொருள் கப்பல் ஒன்று சோமாலியா கடற் கொள்ளையர்களினால் கடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த கப்பலில் 08 பேர் பயனித்துள்ளதாகவும், கப்பல் பழுதடைந்துள்ளதாகத் தகவல் கிடைத்தன் பின்னர், சோமாலியா கடற் பகுதிக்கு பயணித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கமைய குறித்த கப்பல் சோமாலியாவின் கடற் கொள்ளையர்களினால் கடத்தப்பட்டிருந்ததால், 2012 ஆம் ஆண்டுக்குப் பிறகு சோமாலியா கடற் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட முதலாவது வர்த்தகக் கப்பல் இதுவாகும் எனவும் சர்வதேச செய்திகள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளன.