இலங்கையர்களுக்கும் பாதிப்பு.. அமெரிக்காவிலுள்ள தூதரகம் அறிவிப்பு..

அமெரிக்காவில் ஹர்வே புயலினால் பாதிக்கப்பட்ட இலங்கையர்கள், உதவி தேவைப்படுமாயின் அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

நேற்று(25) மாலை டெக்சாஸ் கடற்கரையில் இந்த புயல் ஏற்பட்ட நிலையில், வார இறுதி வரை நடுத்தர டெக்சாஸ் கடற்கரைக்கு அருகே அல்லது உள்நாட்டிலேயே இந்த புயல் தாங்கியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புயலினால் பாதிக்கப்பட்ட இந்த பகுதிகளில் வசிக்கும் இலங்கை மக்கள் வாஷிங்டன் உள்ள தூதரகத்திற்கு அல்லது டெக்சாஸில் உள்ள இலங்கையின் தூதரகத்திற்கு தொடர்பு கொண்டு உதவிகளை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள உறவினர்கள் உட்பட தொடர்பு கொள்ள முடியும் என அமெரிக்காவிலுள்ள இலங்கை தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

 

(rizmira)