ஒன்லைன் முறையில் ஓய்வு பெறுவது தொடர்பாக பதிவு செய்தல் மற்றும் புகையிரத அனுமதி பத்திரத்தை பெற்று கொடுத்தல் இன்று(08) முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இன்றைய தினம் கொண்டாடப்படும் தேசிய ஓய்வூதிய தினத்தை முன்னிட்டு ஒன்லைன் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு, ஓய்வு பெற்ற அரச சேவையாளர்களுக்காக மேலும் துரிதமான பல சேவைகளை இன்று முதல் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் ஓய்வூதிய திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த தினத்தின் பிரதான நிகழ்வு களனி, வெதமுல்ல ஓய்வு விடுதியில் இன்று நடைபெறவுள்ளது.