இலங்கையர்கள் 32,000 பேருக்கு இரட்டைப் பிரஜாவுரிமை…

வௌிநாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள இலங்கையர்கள் 32,000 பேருக்கு கடந்த 3 வருட காலப் பகுதியில் அரசாங்கம் இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கியுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2017 ஆம் ஆண்டில் 12,000 பேருக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரட்டைப் பிரஜாவுரிமை கோரி ஒரு மாதத்தில் 700 விண்ணப்பதாரிகள் விண்ணப்பிப்பதாக குடிவரவு மற்றும் குடியகழ்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இரட்டைப் பிரஜாவுரிமை கோரி வருகின்ற விண்ணப்பங்கள் விசேட குழுவினூடாக பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதன் பின்னர் இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப்படவுள்ளதாக குடியகழ்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.