MORA சூறாவளியினால் பங்களாதேஷில் சுமார் 10 இலட்சம் மக்கள் பாதிப்பு..

வங்காள விரிகுடாவில் உருவாகியிருந்த தாழமுக்கமானது, தற்போது மோரா சூறாவளியாக வலுவடைந்துள்ள நிலையில், பங்களாதேஷின் கிழக்கு கடற்கரை பகுதியை தாக்கியதால் சுமார் 10 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

குறித்த சூறாவளியானது தற்போது மணித்தியாலத்திற்கு 180Km வேகத்தில், பங்களாதேஷின் தென்கிழக்கு பகுதியில் நகர்ந்து கொண்டிருப்பதாகவும், காற்றின் வேகம் அதிகமாக இருப்பதனால் குறித்த பிராந்தியத்தில் அனர்த்த முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டு மக்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அனர்த்த மைய செய்தி தொடர்பாளர் அபுல் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த மோரா சூறாவளியின் காரணமாக கனமழை பெய்து வருவதாகும் குறித்த அனர்த்த நிலைமைகள் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு தொடருமென சர்வதேச வானிலை அவதான மையம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இலங்கையின் கரையோரப்பகுதிகள் மற்றும் மத்திய மலைநாட்டு பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருக்குமென்பதோடு, இடைக்கிடையே காற்றுடன் கூடிய மழை வீழ்ச்சி இருக்குமென தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)