இலங்கையினை தோற்கடித்த பாகிஸ்தான் அணிக்கு அபராதம்..

பாகிஸ்தான் அணியின் தலைவர் சர்பராஸ் அஹமட்டுக்கு சர்வதேச கிரிக்கெட் சபை அபராதம் விதித்துள்ளது.

இலங்கை அணியுடன் நேற்று(12) இடம்பெற்ற போட்டியின் போது பாகிஸ்தான் அணி, பந்து வீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டமை காரணமாக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

எனவே அணியின் தலைவர் சர்பராஸ் அஹமட்டுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 20 சதவீத அபராதமும், ஏனைய வீரர்களுக்கு 10 சதவீத அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

 

(rizmira)