இலங்கையின் அபிவிருத்தியை நடைமுறைப்படுத்த ஜப்பானிடமிருந்து சலுகைக்கடன்

இலங்கையின்  அபிவிருத்திக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு, ஜப்பானிய அரசாங்கம் 90 மில்லியன் டொலர் (13 பில்லியன் ரூபா) சலு கைக்கடனை வழங்கியுள்ளது.

இது தொடர்பான, பிரகடனப் பத்திரத்தை,நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம், ஜப்பானியத் தூதுவர் கெனிச்சி சுகமா கையளித்துள்ளார்.
2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இலங்கை அரசாங்கம் முன்மொழிந்திருந்த அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கே, இந்த சலுகைக் கடனை ஜப்பானிய அரசாங்கம் வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர், 25 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்தும் வகையில் இந்த சலுகைக்கடன் வழங்கப்படுகிறது. இந்தக் கடனுக்கு 1.4 வீத வட்டியையே செலுத்த வேண்டும்.
மேலும்,  இதுபோன்ற சலுகைக்கடனை இலங்கைக்கு ஜப்பான் வழங்குவது இதுவே முதல்தடவையாகும்.