இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட்டதால் அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷாப் மீது நடவடிக்கை…

இராஜதந்திர நெறிமுறைகளை மீறி இலங்கையின் உள்விவகாரங்களில் அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷாப் நேரடியாகத் தலையிடுகின்றார் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திடம் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை நாட்டிற்கு திருப்பியழைப்பதற்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சர்வதேசத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் அந்நாட்டு வெளிவிவகாரப் பிரிவு ஆராய்ந்து வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கண்டி கலவரம் தொடர்பில் அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷாப் வெளியிட்டிருந்த கருத்து மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருவதற்கு முயற்சிக்கப்பட்டவேளை அவர் செயற்பட்ட விதம் உட்பட மேலும் சில காரணிகளே அவருக்கு எதிராக மாறி விட்டன என அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

####