இலங்கையின் கடன் சுமையினை குறைக்க 04 நாடுகள் முன்னின்று ஆதரவு..

இலங்கையினால் பெறப்பட்டுள்ள கடன் சுமையை குறைப்பதற்கு முன்னிற்பதாக  அமெரிக்கா, ஜேர்மன், பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் உத்தியோகபூர்வமாக இணக்கம் தெரிவித்துள்ளன.

நிதி அமைச்சருடன், குறித்த நாடுகளின் தூதுவர்களும் உயர்ஸ்தானிகர்களும் நேற்று(27) பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்கள்.

இதன்போது மேற்குறித்த இந்த இணக்கத்தை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

இலங்கையின் கடன் தற்போது 8500 பில்லியன்களாக காணப்படுகிறது. இதில் 42 சதவீதமானவை வெளிநாட்டுக் கடன்களாகும்.

இதனை குறைப்பதற்கும் வட்டி குறைந்த கடன்களை ஒழுங்கு செய்வதற்கும், இது குறித்து உலக வங்கிக்கு பரிந்துரை செய்யவும் குறித்த நாடுகளின் ராஜதந்திரிகள் உறுதியளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.