இலங்கையின் கடல் உணவு ஏற்றுமதி தடை நீக்கம்?

இலங்கையில் இருந்து கடல் உணவுகள் ஏற்றுமதி தடையை நீக்குவதற்கான ஆரம்ப ஒப்புதலை ஐரோப்பியஒன்றியம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மீன்பிடித்துறை அமைச்சு தரப்புக்களை கோடிட்டு அரசாங்க பத்திரிகை இந்தசெய்தியை பிரசுரித்துள்ளது.

இந்தநிலையில் இந்த தடையை நீக்குவதற்கான யோசனை ஐரோப்பிய நாடாளுமன்றத்தில்சமர்ப்பிக்கப்பட்டு அது நிறைவேற்றப்பட்ட பின்னர் அது குறித்து ஒன்றியம் இலங்கைக்குஅறிவிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இலங்கையின் தூதுக்குழு ஒன்று பிரசல்ஸுக்கு சென்று இது தொடர்பில் பேச்சுக்களைநடத்தியுள்ளது.