இலங்கையின் தகவலறியும் சட்டமானது, உலகலாவிய ரீதியில் 3வது சிறந்த தகவல் அறியும் சட்டமாகக் கண்டறியப்பட்டுள்ளது.
கனடாவின் சட்டம் மற்றும் ஜனநாயகம் தொடர்பான மத்திய நிலையம் வெளியிட்டுள்ள புதிய தரப்படுத்தல் பட்டியலில் மேற்குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் இலங்கையின் தகவல் அறியும் சட்டம் இதற்கு முன்னர் 7வது இடத்தில் இருந்தது.
அதற்கு சில மாதங்களுக்கு பின்னர் இது 9ஆவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டது.
எனினும், வர்த்தமானியில் வெளியிடப்பட்ட தகவல் அறியும் சட்டம் மற்றும் விதி முறைகளைக் கவனத்திற் கொண்டு இலங்கைக்கு தரப்படுத்தலில் 10 புள்ளிகள் மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, தரப்படுத்தலில் இலங்கை மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது.
இதேவேளை, இதுவரை 800 க்கும் அதிகமான தகவல்களை அறிந்துகொள்வதற்கான விண்ணப்பங்கள் அரச நிறுவனங்களிடம் இருந்து கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளத