(FASTNEWS | COLOMBO) – இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பாகவும் நாட்டின் எதிர்கால நலனிற்காக முன்னெடுக்கப்படவுள்ள தீர்மானங்கள் தொடர்பாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(15) சர்வதேச நாடுகளின் தலைவர்களை தெளிவுபடுத்தவுள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற துயரச் சம்பவத்தை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்துள்ள பின்னணியில் இலங்கையில் முதலீடுகளை மேற்கொண்டுள்ள மற்றும் முதலீடுகளை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ள தரப்பினருக்கு நம்பிக்கையளிப்பதற்கும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பிலும் ஜனாதிபதி இதன்போது தெளிவுபடுத்தவுள்ளார்.
இதேவேளை, பயங்கரவாதத்தை வேரறுத்து, தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அனைத்து வழிகளிலும் இலங்கைக்கு உதவத் தயாரென சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் நேற்று(14) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்த போது, உறுதியளித்துள்ளார்.