இலங்கையின் தேசிய விமான சேவைக்கு பூட்டு.. ?

இலங்கையின் தேசிய விமான சேவையான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மூடப்படும் நிலைக்கு செல்லலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பாரிய கடன் செலுத்துகை திட்டத்தில் இருந்து மீளாத சந்தர்ப்பத்தில் இது நடந்தே தீரும் என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

இதனை தடுக்க திரவத்தன்மை பங்குதாரரை கவரவேண்டும், அல்லது அரசாங்கம் நிதியில்லாமல் புத்தூக்க நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஏற்கனவே ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், அரச வங்கிகளிடம் இருந்து பெற்ற பாரிய தொகை கடன்களை இன்னும் மீளச் செலுத்தவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் செலவீனக் கட்டுப்பாட்டை மேற்கொள்ளவேண்டுமானால், உயர்மட்டத்தில் அதிகளவான சம்பளத்தை பெற்றுக்கொள்ளும் அதிகாரிகள் மட்டத்தில் அது செயற்படுத்தப்பட வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

 

#\\\