இலங்கையின் புதிய வரைபடமானது 2018ம் ஆண்டு நடுப்பகுதியில் வெளியிடப்படும்..

நாட்டின் நிலப்பரப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுடன் இலங்கையின் புதிய வரைபடமானது எதிர்வரும் 2018ம் ஆண்டு நடுப்பகுதியில் வெளியிடப்படவுள்ளதாக அளவையாளர் நாயகம் பீ.எல்.பீ உதயகுமார தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தினாலும் கொழும்பு துறைமுக நகரத்தினாலும் இலங்கையின் நிலப்பரப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், குறித்த இந்த புதிய வரைபடத்தை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

(rizmira)