இலங்கையின் மிகப் பெரிய மாற்று சக்தி மின் நிலையத்திற்கான வேலைத்திட்டம் ஆரம்பம்..

இலங்கையின் மிகப் பெரிய மாற்று சக்தி மின் நிலையத்திற்கான வேலைத்திட்டம், மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தலைமையில் கிளிநொச்சியில் நேற்று(06) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

காற்று, சூரிய ஒளி ஆகியவற்றைக் கொண்டு மாற்று மின்சக்தி நிலையங்களை உருவாக்குவதே குறித்த திட்டத்தின் நோக்கமாகும்.

மேலும் சூரியசக்தி மூலம் 800Mw காற்றலை மூலம் 240Mw இனைப் பெறக் கூடிய திட்டமே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன் மூன்று பிரிவுகளாக குறித்த இந்த வேலைத்திட்டம் நடைபெற உள்ளது அத்துடன் முதற்கட்டமாக ஒகஸ்ட் மாதம் சுமார் 270Mw பெறக்கூடியவாறு மாற்றுசக்தி திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது

குறித்த இந்நிகழ்வில் மின் சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க அமைச்சின் அதிகாரிகள், மாவட்ட அரச அதிகாரிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

 

(rizmira)