இலங்கையின் வரலாற்றுத் தோல்வியினை அடுத்து டெஸ்ட் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது ஐசிசி…

இலங்கை, இந்திய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் முடிவடைந்ததை அடுத்து புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

புதிய தரவரிசை பட்டியலில் இந்தியா 125 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடம் நீடிக்கிறது. இந்திய அணியுடனான தொடரை இழந்த இலங்கை அணி 2 புள்ளிகள் குறைவடைந்து 90 புள்ளிகள் பெற்றுள்ளது.

எனினும், தரவரிசை பட்டியலில் மாற்றமின்றி இலங்கை அணி 7 வது இடத்திலேயே தொடர்ந்தும் உள்ளது.

புதிய தரவரிசை பட்டியலின் படி, 110 புள்ளிகளுடன் தென்னாபிரிக்க 2வது இடத்திலும், 105 புள்ளிகளுடன் இங்கிலாந்து 3வது இடத்திலும் உள்ளன.

அவுஸ்திரேலியா (100), நியூசிலாந்து(97), பாகிஸ்தான்(93) அணிகள் முறையே 4ஆம், 5ஆம் மற்றும் 6ஆம் இடங்களைப் பெற்றுள்ளன. 90 புள்ளிகள் பெற்று இலங்கை 7வது இடத்தில் உள்ளது.

75 புள்ளிகளுடன் 8ஆம் இடத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியும், 69 புள்ளிகளுடன் 9ஆம் இடத்தில் வங்கதேச அணியும், புள்ளிகள் இன்றி ஜிம்பாப்வே கடைசி இடத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)