இலங்கையிலிருந்து இந்தியா வான் பரப்பினூடாக பயணிக்கும் விமானப் பயணங்களில் தாமதம்…

இலங்கைக்கும் – இந்தியாவுக்கும் இடையிலான விமானச் சேவைகள் யாவும் இன்று(26) நண்பகல் 12 மணி வரையிலும் தாமதமாகும் என்று கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் அறிவித்துள்ளது.

இந்தியாவின் கிழக்கு எல்லையில் ஏவுகணைகள் சில, சோதனைக்கு உட்படுத்தப்படுவதனால், தாமதம் ஏற்பட்டுள்ளதாக விமான நிலையத்தின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

அதனடிப்படையில் 10 சேவைகள் தாமதமாகும். என்றும் அந்த நிலையம் அறிவித்துள்ளது.

ஜகர்த்தா மற்றும் சிங்கபூர் நோக்கி, இன்று காலை புறப்படவிருந்த விமானச்சேவைகள் இரண்டும், இன்று நண்பகல் 12 மணிவரையிலும் தாமதப்படுத்தப்படுள்ளது.

இதேவேளை, இன்று காலை 8:30 மணிமுதல் பகல் 12:30 வரையிலும் ஏவுகணை சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று இந்தியா தெரிவித்துள்ளது.