இலங்கையிலும் வலுப்பெறும் ஜல்லிக்கட்டு பரம்பரியத்திற்கான ஆதரவு ..

தமிழகத்தின் ஜல்லிக்கட்டு பாரம்பரிய விளையாட்டினை ஆதரித்து யாழ்ப்பாணத்தில் ​நேற்று(18) மாலை ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றிலில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்கள், யுவதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழகத்தின் கோரிக்கைக்கு பலம் சேர்க்கும் வகையிலான வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ஏந்தியிருந்தனர்.

யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளையும் சேர்ந்த இளைஞர் கழகங்கள், இளைஞர் அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் இதில் பங்கெடுத்திருந்தனர்.