(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 3 வருட காலமாக அதவாது 2011ம் ஆண்டு தொடக்கம் 2014ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அவுஸ்திரேலியாவின் உள்ளூர் கிரிக்கெட் அணிகளில் ஒன்றான New South Wales அணியின் உதவிப் பணிப்பாளராக கடமையாற்றிய இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் சந்திக்க ஹத்துருசிங்க மீண்டும் அவ்வணிக்கு திரும்பி அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் பிரபல பயிற்றுவிப்பாளர்களில் ஒருவரான க்றிஸ் ரோஜர்ஸ் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியின் உதவிப் பணிப்பாளர் டொபி ரெட்போட் ஆகியோரும் குறித்த பதவிக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், சந்திக்க ஹத்துருசிங்கவுக்கு இந்த வாய்ப்பு கிட்டியுள்ளமை விசேடமாகும்.
இதேவேளை, சந்திக்க ஹத்துருசிங்க இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வந்த நிலையில், தர்க்க நிலைகள் மேலெழ ஒப்பந்த காலத்திற்கு முன்னரே குறித்த பதவியில் இருந்து நீக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
எனினும், பங்களாதேஷ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக தெரிவு செய்யப்படுவார் என கணிக்கப்பட்டிருந்த நிலையில் இவர் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியொன்றுக்கு பயிற்சியாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளமை அனைவரதும் கவனத்தை திருப்பியுள்ளது எனலாம்.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளராக முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் சந்திக்க ஹத்துருசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
நியூ சவுத் வேல்ஸ் கிரிக்கெட் அணியின் உதவி பயிற்றுவிப்பாளராக இருந்த நிலையில் முதல் முறையாக சர்வதேச அணி ஒன்றுக்கு (பங்களாதேஷ் கிரிக்கெட் அணி) பிரதான பயிற்றுவிப்பாளராக 2014ம் ஆண்டு சந்திக்க ஹத்துருசிங்க நியமிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.