ஆயுர்வேத மூலிகைத் தயாரிப்பிற்காக இலங்கையில் கஞ்சா செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பத்தரமுல்லையில் இன்று(11) இடம்பெற்ற ஆயுர்வேத மூலிகை மருந்து உற்பத்திகளை அறிமுகம் செய்யும் நிகழ்வில் கலந்துக் கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் செய்கையிடப்படும் கஞ்சாவினை ஏற்றுமதி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.
மேலும் ஆயுர்வேத மூலிகை உற்பத்திக்கு கஞ்சா அவசியம் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.