(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொவிட் 19 எனும் கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்குள்ளானவர்களில் ஒரு வயதும் ஐந்து மாதங்களுமான குழந்தையும் உள்ளடங்குவதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த குழந்தையின் தாய்க்குத் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளதென வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தையின் தந்தைக்கும் கொரோனா தொற்றியுள்ளதா என பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இவர்கள் இத்தாலியில் இருந்து வருகைத் தந்தவர்களாகும்.
இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நேற்று(17) இரவு வரையில் 43ஆக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.