இலங்கையில் கொரோனா வைரஸ் இல்லாத மாவட்டங்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது.

இதன்படி, இலங்கையில் இதுவரை 22 மாவட்டங்களில் 622 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் நான்கு மாவட்டங்களில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றன.

அதன்படி, நுவரெலியா, கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலேயே கொரோனா வைரஸ் தொற்றுள்ள எவரும் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்றுள்ளாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.