இலங்கையில் முகத்திரைக்கு தடை

(FASTGOSSIP| COLOMBO) – நீதியமைச்சர் தலதா அத்துகோரல சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைய முகத்தை முழுமையாக மூடும் வகையில் முஸ்லிம் பெண்கள் அணியும் திரையினை (நிக்காபை) நிரந்தரமாக தடை செய்யும் சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றத்தில் கொண்டுவர நேற்று(30) கூடிய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அவசர காலச் சட்டத்தின் கீழ் இப்போது அது தடை செய்யப்பட்டிருந்தாலும் அதனை நிரந்தரமாக தடை செய்யவே அமைச்சரவை நேற்று(30) தீர்மானித்தது.

அமைச்சரவையின் குறித்த தீர்மானத்தின்படி விரைவில் பாராளுமன்றத்தில் இதற்கான சட்டமூலம் கொண்டுவரப்பட்டு முகத்தினை மூடலை நிரந்தரமாக இலங்கையில் தடை செய்யும் பிரேரணை நிறைவேற்றப்படுமென சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.