இலங்கையில் 35வது கொரோனா மரணம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

78 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்வடைந்துள்ளது.