இலங்கையில் HIV தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 2,245 ஆக உயர்ந்துள்ளதாக கணிப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
15 – 25 வரையான வயதுப் பிரிவைச் சேர்ந்தவர்களே HIV, தொற்றுக்கு அதிகளவில் இலக்காவதாகவும் பாலியல் நோய்கள் மற்றும் எய்ட்ஸ் தொற்று தேசிய ஒழிப்பு திட்டத்தின் பணிப்பாளரான டாக்டர் சிசிர லியனகே குறிப்பிடுகின்றார்.
எது எவ்வாறாயினும், வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 9 இலட்சம் பேர் வரை எய்ட்ஸ் தொடர்பான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இன்னும், பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் அதிகமானோர் தாய்மார்கள் எனவும் பாலியல் நோய்கள் மற்றும் எய்ட்ஸ் தொற்று தேசிய ஒழிப்பு திட்டத்தின் பணிப்பாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.
(riz)