சிம்பாப்வேயில் நடைபெறும் முக்கோண ஒருநாள் கிரிக்கட் தொடரில் இன்று மேற்கிந்திய தீவுகளுடன், இலங்கை அணி மோதுகிறது.
நாணயட் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பினை தீர்மானித்துள்ளது.
குறித்த போட்டியானது புலவாயோவில் நடைபெறுகிறது.
இந்த தொடரின் புள்ளிகள் அடிப்படையில் மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இடத்தில் உள்ளது.
அந்த அணி பங்கேற்ற 2 போட்டிகளில் ஒன்றில் வென்றதுடன், ஒரு போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.
இலங்கை அணி 3 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றியைப் பெற்றதுடன், ஒரு போட்டியில் தோற்று மற்றுமொரு போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டிருந்தது.