இலங்கையுடனான போட்டியில், இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் அண்டர்சனுக்கு அபராதப் புள்ளி…

 இலங்கையுடனான டெஸ்ட் போட்டியில் நேற்று(08) அதிருப்தியை வெளிப்படுத்தியமைக்காக, இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அண்டர்சனுக்கு சர்வதேச கிரிக்கட் பேரவையின் வீரர்களுக்கான ஒழுங்குவிதி மீறலுக்கு அமைவாக ஒரு அபராதப் புள்ளி வழங்கப்பட்டுள்ளது.

போட்டியில் நடுவருடன் ஏற்பட்ட முறுகலை அடுத்து அவர் பந்தினை மைதானத்தில் வீசி எறிந்துள்ளதாலேயே குறித்த அபராதப் புள்ளி வழங்கப்பட்டுள்ளது.

அவர் மீதான குற்றச்சாட்டை அவர் ஒப்புக் கொண்ட நிலையில் அவருக்கு ஒரு அபராதப் புள்ளி விதிக்கப்பட்டதுடன், மேலதிக விசாரணைகள் அவசியப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏலவே கடந்த செப்டம்பர் மாதம் ஓவலில் இடம்பெற்ற இந்தியாவுடனான டெஸ்ட் போட்டியின் போது முறைத்தவறி நடந்துக் கொண்டமைக்காக அவருக்கு ஒரு அபராதப் புள்ளி வழங்கப்பட்டது.

இரண்டு வருட காலப் பகுதிக்குள் 04 அபராதப் புள்ளிகளைப் பெறுகின்ற வீரருக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.