இலங்கையுடன் ஐந்து ஆண்டுகளுக்குப் பின் டெஸ்ட் தொடரில் இந்தியா

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 12,16ம் திகதி வரையும், 2–வது டெஸ்ட் 20,24ம் திகதி வரையும், 3–வது மற்றும் கடைசி டெஸ்ட் ஆகஸ்ட் – 28, செப்டம்பர் 1ம் திகதி வரையும் நடக்கிறது.

டெஸ்ட் தொடருக்கு முன்பு இந்திய அணி இலங்கை சேர்மன் லெவனுடன் 3 நாள் ஆட்டத்தில் (6–8) விளையாடுகிறது.

இலங்கை சுற்றுப் பயணத்துக்கான இந்திய அணி வருகிற 23ம் திகதி அறிவிக்கப்படுகிறது. சந்தீப் பட்டீல் தலைமையிலான தேர்வு குழு டெல்லியில் கூடி வீரர்களை தேர்வு செய்கிறது.

முழுமையான பலம் பெற்ற இந்திய அணி இதில் விளையாடும். ஜிம்பாப்வே பயணத்தில் 2–வது கட்ட இந்திய அணி விளையாடி வருகிறது. வீராட் கோலி கெப்டனாக நியமிக்கப்படுவார். வங்காள தேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆடிய வீரர்கள் இதில் இடம் பெறுவார்கள்.

இந்திய அணி 5 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையில் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. கடைசியாக 2010–ல் ஆண்டு சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டியில் ஆடியது. இத்தொடர் 1–1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

(riz)