இலங்கையுடன் மிக நெருக்கமான வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை பேணுவதற்கு விரும்புவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிற்கான புதிய இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்ட தயான் ஜயதிலக்க தனது நியமனக் கடிதத்தை ரஷ்ய ஜனாதிபதியிடம் நேற்று(11) கையளித்தனர்.
இதனை ஏற்றுக் கொண்டு அங்கு கருத்து தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி புட்டின் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.