இலங்கை கிரிக்கெட் அணியில் அதிரடி தொடக்க வீரராக காலடி பதித்தவர் முன்னாள் அணித்தலைவரான சனத் ஜயசூரிய.
இடது கை துடுப்பாட்ட வீரரான சனத், டெஸ்டில் 6,973 ஓட்டங்களையும், ஒருநாள் போட்டியில் 13,430 ஓட்டங்களையும் குவித்து சாதனை படைத்தவர்.
மேலும், இலங்கை கிரிக்கெட் அணிக்கு சிறந்த பங்களிப்பு அளித்து உள்ளார்.
இந்நிலையில் தனது மகன் ரனுக்விற்கு கிரிக்கெட் பயிற்சி அளித்து வருகிறார். சனத் ஜயசூரியவை போலவே இடது கை துடுப்பாட்ட வீரரான ரனுக்கும் தனது தந்தையின் அறிவுரைப் படி தீவிர பயிற்சி எடுத்து வருகிறார்.
இதனால் அடுத்த சனத் ஜயசூரியவை இலங்கை கிரிக்கெட் அணியில் விரைவில் எதிர்பார்க்கலாம்.
[youtube url=”https://www.youtube.com/watch?v=UGG9bi66zSU” width=”560″ height=”315″]