இலங்கை அணிக்கு வெளியாட்களிடம் இருந்து அழுத்தங்கள் பிரயோகிப்படும் எனின் அது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தம்புள்ளை மைதானத்தில் ரசிகர்கள் நடந்து கொண்ட விதம் குறித்தும் கருத்து வெளியிட்டிருந்தார்.
ரசிகர்களுக்கு தோல்வியின் விரக்தியில் தான் இவ்வாறு நடந்து கொண்டனர், எனக்கும் இருந்தது.. என்றாலும் முறுகல் நிலையினை தோற்றுவித்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
(rizmira)