இலங்கை அணிக்கு அழுத்தம் கொடுத்து மாறுபட்ட திட்டங்களுடன் களமிறங்கும் நியூசிலாந்து

(FASTGOSSIP|COLOMBO ) – இலங்கைக்கு எதிராக இன்று(22) நடைபெறவிருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மாறுபட்ட போட்டி திட்டங்களுடன் களமிறங்கப்போவதாக நியூசிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் ரொஸ் டெய்லர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான திட்டம் பற்றி டெய்லர் குறிப்பிடும்போது,

முதல் டெஸ்டில் அடுகளத்தை தெரிந்துகொண்டு விளையாடினோம். இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர்களும் மாறுபாடுகளுடன் பந்துவீசுகின்றனர். இந்நிலையில், நாம் மாறுபட்ட போட்டித் திட்டத்துடன் இந்த போட்டியில் ஆடவுள்ளோம் என ரொஸ் டெய்லர் தெரிவித்துள்ளார்.

எதரணிக்கு அழுத்தம் கொடுப்பது மற்றும் ஓட்டங்களை சேகரிக்கும் முறையே எனது போட்டித் திட்டமாக உள்ளது எனவும் ஆடுகளம் எப்படி இருக்கிறது என்று பார்த்து அதற்கேற்ப ஆடுவதற்கு எதிர்பார்த்துள்ளோம் என டெய்லர் கூறியுள்ளார்.

மேலும், போட்டி ஒன்றை தோற்றது ஏமாற்றமாக இருந்தாலும், சிறந்த முடிவொன்றை பெறுவதற்காக நாம் அனைத்து முயற்சிகளையும் செய்வோம். இதற்கு முன்னரும் 1-0 என பின்தங்கிய நிலையில் மீண்டு வலுவான ஆட்டத்தை நாம் வெளிப்படுத்தி இருக்கிறோம்.

மிகச்சிறந்த இலங்கை அணிக்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்று நாம் எதிர்பார்க்கிறோம் என்றும் ரொஸ் டெய்லர் குறிப்பிட்டார்.