இலங்கை அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கிண்ண பயிற்சிப் போட்டியில் ஆஸி வெற்றி…

சாம்பியன்ஸ் கிண்ணத்திற்கான இலங்கை அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டி ஒன்றில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

லண்டனில் நேற்று(26) இடம்பெற்ற குறித்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதையடுத்து, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 50 ஓவர்களில் 07 விக்கட்டுக்களை இழந்து 318 ஓட்டங்களைப் பெற்றது.

318 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 49.4 ஓவர்கள் நிறைவில் 08 விக்கட்டுக்களை இழந்து 319 ஓட்டங்களைப் பெற்று வெற்றியடைந்தது.

 

(rizmira)