இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான T-20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுக்களால் இலங்கையைத் தோற்கடித்துள்ளது.
மும்பையில் நேற்று(24) நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணயற் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி, இலங்கையை முதலில் துடுப்பெடுத்தாடும்படி அழைத்தது.
இதன்படி, இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஏழு விக்கெட்டுக்களை இழந்து இலங்கை 135 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 19.2 ஓவர்களில் 139 ஓட்டங்களை குவித்து வெற்றியைத் தனதாக்கிக் கொண்டது.
மூன்று போட்டிகள் கொண்டT-20 தொடரில் 3-0 என்ற அடிப்படையில் இந்திய அணி தொடரை வெற்றி கொண்டுள்ளது.
####