இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
குறித்த நியமனம் 2019 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ண தொடர் வரை நீடிக்கும் என குறித்த கிரிக்கெட் சபை (BCCI) தெரிவித்துள்ளது.
அந்த வகையில் அவரது முதலாவது பணியாக, ஜூலை 26 இல் இலங்கையில் ஆரம்பமாகவுள்ள இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான போட்டி அமையவுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராத் கோஹ்லி, அனில் கும்ப்ளே பற்றி பேசிய கருத்துகள் காரணமாக, இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த கும்ப்ளே இராஜினாமா செய்திருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
(rizmira)