(FASTGOSSIP | COLOMBO) – பங்களாதேஷ் அணியுடன் இடம்பெற்ற இறுதி ஒருநாள் போட்டியானது நேற்றைய தினம் (31) கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் 122 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரினை 03-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்ற இலங்கை அணிக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.
நேற்றைய போட்டியானது வேகப்பந்து வீச்சாளர் நுவன் குலசேகரவுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
போட்டியின் குறித்த வெற்றிக்காக பரிசளிக்கப்பட்ட மூன்று மோட்டார் சைக்கிள்களிலும் இலங்கை வீரர்கள் கிரிக்கெட் மைதானத்தினை சுற்றி வெற்றிக் களிப்பினை கொண்டாடினர்.
அதன்போது குசல் மென்டிஸ் மற்றும் தசுன் ஷானக ஆகியோர் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிள் கிரிக்கெட் மைதானத்தில் சறுக்கி விழுந்ததை காணக்கூடியதாக இருந்தது.
குறித்த காணொளி;