(FASTNEWS | COLOMBO) – இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெறுகின்ற நிலையில், நாணய சுழற்சியை வென்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதனையடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த நியூஸிலாந்து அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 285 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.
துடுப்பெடுத்தாட்டத்தில் நியூஸிலாந்து அணி சார்பில் பெரட்லி ஜோன் வட்லின் 77 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் லசித் அம்புல்தெனிய 4 விக்கெட்டுக்களையும் தனஞ்சய டி சில்வா 3 விக்கெட்டுக்களையும் லஹிரு குமார 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளனர்.
அதனடிப்படையில் இலங்கை அணிக்கு வெற்றியிலக்காக 267 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது இன்னிங்ஸ்


