இலங்கை அணிக்கு வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக சமிந்த நியமனம்.

இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சமிந்த வாஸ் அந்த அணிக்கு வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த தகவலை இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

மேலும், சமிந்த வாஸ் இந்த மாத இறுதிக்குள் அணியில் இணைந்து கொள்வார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தவிர, 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி, இலங்கை ’ஏ’ அணி மற்றும் உள்ளூர் அணிகளுக்கும் அவர் வேகப்பந்து பயிற்சி வழங்குவார் என்றும், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கிர்க்கெட் அணிகளுக்குமான பந்துவீச்சு ஆலோசனையை வழங்குவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கை கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சு வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், இதை சரிசெய்யும் முயற்சியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சுமதிபால தெரிவித்துள்ளார்.