இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 5 ஆவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் சிம்பாப்வே அணி 3 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
நேற்றைய(10) போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 8 விக்கட்டுக்களை இழந்து 203 ஓட்டங்களைப் பெற்றது.
இலங்கை அணி சார்பில் அசேல குணரத்ன ஆட்டமிழக்காமல் 59 ஓட்டங்களையும், தனுஷ்க குணதிலக்க 52 ஓட்டங்களையும் பெற்று கொடுத்தனர்.
சிம்பாப்வே அணி சார்பில் பந்து வீச்சில் சிக்கந்தர் ராசா 3 விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.
இந்நிலையில் பதிலுக்கு துடுப்பாடிய சிம்பாப்வே அணி 38.1 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
அணி சார்பில் Hamilton Masakadza 73 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.
இதன்படி 5 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரை 2க்கு 3 என்ற அடிப்படையில் சிம்பாப்வே அணி கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
