இலங்கை அணியினை வீழ்த்தி பங்களாதேஷ் அணி வெற்றி…

இலங்கையின் 70வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற ஆறாவது இருபதுக்கு – 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி 2 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

நேற்று(16) நடைபெற்ற போட்டியில் இலங்கை – பங்களாதேஷ் அணிகள் மோதிக் கொண்டன. போட்டியின் நாணய சுழற்சியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்று முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கட்களை இழந்து 159 ஓட்டங்களை பெற்றது.

160 எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 19.5 ஓவர்களில் 8 விக்கட்களை இழந்து 160 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றது.

பங்களாதேஷ் அணி இந்த போட்டியில் வெற்றியீட்டியதை தொடர்ந்து இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

-R