இலங்கை கிரிக்கெட் அணியின் அண்மைக் கால தோல்விகளிலிருந்து வெற்றிப் பாதையை நோக்கி அழைத்துச் செல்வதற்கு, முன்னாள் நட்சத்திர வீரர் அரவிந்த டி சில்வாவை நாடுவதற்கு, இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.
அதன் பிரகாரம் இலங்கை கிரிக்கெட் அணியின் சர்வதேசப் போட்டிகளுக்கான பொறுப்பு, அரவிந்தவுக்கு வழங்கப்படவுள்ளதாகத் தெரிய வருகிறது. இதன்படி, அப்போட்டிகளின் பயிற்றுவிப்புப் பணியில் ஈடுபடும் அனைவரும், அரவிந்தவுக்குக் கீழ் பணியாற்றும்படி செய்யப்படவுள்ளது.
முதற்கட்டமாக, இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளரை தெரிவு செய்யும் பணி, இவருக்கு ஒப்படைக்கப்படவுள்ளது.
அரவிந்த டி சில்வா, ஏற்கெனவே இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக்குழுத் தலைவராகவும் பின்னர் அணியின் வழிகாட்டுநராகவும் செயற்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
(rizmira)