இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் டெஸ்ட் துடுப்பாட்ட வீரரான திலான் சமரவீர நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.
இந்திய சுற்றுப் பயணத்துக்கான இலங்கை அணியினருடன் சமரவீர இணைந்து தனது பணியை தொடங்க உள்ளார்.
41 வயதான மிடில் ஆர்டர் துடுப்பாட்ட வீரரான திலான் சமரவீர 81 டெஸ்ட் போட்டியில் ஆடி 5,462 ஓட்டங்களை எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
E-(reeshma)