இலங்கை அணியின் தோல்வியின் எதிரொலியும் அத்தப்பத்துவின் இராஜினாமாவும்

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கை இழந்ததையடுத்து அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் அத்தப்பத்து தன் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.

இதில் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

மேலும், சொந்த மண்ணில் இலங்கை அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் இலங்கை அணியில் சில மாற்றங்களை செய்ய இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்துள்ளது.

இதற்கிடையில் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் அத்தப்பத்து ராஜினாமா செய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் டுவிட்டர் மூலம் உறுதி செய்துள்ளது.

(riz)