இலங்கை கிரிக்கெட் அணித் தெரிவின் போது, இளைஞர்களுக்கும், அனுபவத்துக்கும் இடையிலான சமநிலை பேணப்பட வேண்டும் என்று முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
தென்னாபிரிக்க அணியுடனான கிரிக்கெட் தொடரில் இலங்கை கிரிக்கெட் அணி படுதோல்வி அடைந்தது.
இந்த தோல்விக்கு, அனுபவத்துக்கும் இளையோருக்கும் இடையிலான சமநிலையற்றத் தன்மையே காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.
ரங்கன ஹேரத் போன்றவர்கள் நீண்ட அனுபவம் கொண்டவர்கள். அவர்களது பங்கேற்றலுடனான அணி உள்நாட்டில் சிறந்த விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தியது.
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் வெற்றி இதற்கு சிறந்த உதாரணமாகும்.
மேலும், “நான் விளையாடும் காலத்தில் அவர்கள் சுராஜ் ரண்திவை கொண்டு வந்தார்கள். ஆனால் அதுவும் நிலைக்கவில்லை. அஜந்த மென்டிஸ் மற்றும் ஜீவன் மென்டிஸ் ஆகியோருக்கும் அதே கதி தான்… திறமையான வீரர்கள் வருவார்கள் மீளவும் திருப்பியனுப்பப்படுகிறார்கள்… “
ஆனால் அவரில்லாத இலங்கை அணி வெளிநாடுகளில் மிகவும் பின்னடைவை சந்திப்பதற்கு, இந்த சமநிலை அற்றத் தன்மையே காரணம் என்று முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.